தமிழ்நாடு அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழத்தில் 800 க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தயாராக உள்ளன.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநர் உடன் நடத்துநர் (Driver cum conductor) பணியிடங்கள் காலியாக உள்ளன. கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தில் 122 ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் உள்ள 807 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்ப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு பிப்ரவரி 14ஆம் தேதி வெளியானது.
இந்தப் பணியிடங்கள் குறித்து நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டு, விண்ணபிப்பவர்களில் இருந்து தேர்வு செய்யப்படுபவர்கள் இந்த வேலைகளில் நியமிக்கப்படுவார்கள். நேரடி நியமனம் மூலமாகவும் இந்தப் பணியிடங்களில் ஓட்டுநர்கள் நியமனம் செய்யப்படுவர்.
Agniveer Recruitment: திருச்சியில் அக்னிபாத் வேலைவாய்ப்பு முகாம்! இப்போதே விண்ணப்பிக்கலாம்!
அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மாநிலத்தில் உள்ள் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்தும் தகுதிவாய்ந்த ஓட்டுநர்களின் மூப்பு பட்டியலை பெற்றுக்கொள்வார்.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் பிப்ரவரி 28ஆம் தேதி (இன்று) முடிகிறது என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிவருகிறது. ஆனால் இந்த வேலைவாய்ப்பு பற்றி போக்குவரத்துக் கழகம் சார்பில் இந்த விளம்பரமும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதுபற்றி விவரங்களை அறிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம். கூடுதல் உதவிக்கு அருகில் இருக்கும் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குச் சென்று விசாரித்துக் கொள்ளலாம்.
Chennai Corporation Recruitment: சென்னை மாநகராட்சியில் 60 ஆயிரம் சம்பளத்துடன் அரசு வேலை!