சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 500 க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு மார்ச் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சியில் நூற்றுக்கணக்கில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் ஐநூறுக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. இவற்றில் தகுதியான நபர்களை பணியில் அமர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, மாநகராட்சியில் நிரப்பப்பட உள்ள காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
காலியாக உள்ள பணியிடங்கள்:
இந்த அறிவிப்பில் சென்னை மாநகராட்சியில் சுகாதாரத் துறையில் பல்வேறு நிலைகளில் 560 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். அவர்களைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை தற்போது தொடங்கி இருக்கிறது.
Agniveer Recruitment: திருச்சியில் அக்னிபாத் வேலைவாய்ப்பு முகாம்! இப்போதே விண்ணப்பிக்கலாம்!
கல்வித்தகுதி:
மருத்துவ அலுவலர், செவிலியர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணி இடங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன. எட்டாம் வகுப்பு படித்தவர் முதல் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மருத்துவர்கள் வரை இந்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ, நர்சிங் படித்தவர்களும் விண்ணப்பிக்க முடியும். உயிரியல், தாவரவியல் & விலங்கியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றவராக இருப்பதும் அவசியம்
சம்பளம்:
சம்பளமாக குறைந்தபட்சம் 8,500 ரூபாய் முதல் அதிகபட்சம் 60,000 ரூபாய் வரை வழங்கப்படும். ஊதியம் நியமிக்கப்படும் பணியைப் பொறுத்து கொடுக்கப்படும். இந்தப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன என்பதையும் விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டியது அவசியம். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தவறாமல் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?:
வரும் மார்ச் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் சென்னை மாநகராட்சியின் இணைதளத்தில் வெளியாகியுள்ள விண்ணப்பப் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்தையும் தேவையான ஆவணங்களையும் சரியாக இணைக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சியின் இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பதை டவுன்லோட் செய்யலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்தும் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய முடியும்.
சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு பற்றி வெளியிட்டப்பட்டுள்ள அதிகாரபூர்வமான அறிவிப்பை என்ற இணைய முகவரியில் டவுன்லோட் செய்யலாம். அல்லது கீழே தரப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து டவுன்லோட் செய்யலாம்.
Urban Health and Wellness Center Recruitment Notifiction
இந்த வேலைவாய்ப்பில் காலிப் பணியிடங்கள் உள்ள பகுதிளையும் மாநகராட்சி பட்டியலிட்டிருக்கிறது. அந்தப் பட்டியலை மாநகராட்சி இணையதளத்தில் காணலாம். கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்தால் பட்டியல் டவுன்லோட் செய்யப்படும்.
Urban Health and Wellness Center Placement Locations
சென்னை மாநகராட்சியில் 560 காலிப் பணியிடங்கள் நிரப்புவது பற்றி கூடுதல் விவரங்களை அறிய விரும்பினால், கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்.