தமிழகத்தில் 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள நிலையில், தகுதியானவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த முறை தமிழ் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள நிலையில், தகுதியானவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த முறை தமிழ் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நிறுவனம்: தமிழக மருத்துவத்துறை
காலி பணியிடங்கள்: 1,021
பணியின் பெயர்: உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இன்று முதல் 25 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு:
தற்காலிக அடிப்படையிலேயே மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும்.எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.500 செலுத்தினால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:Video : ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பலர் படுகாயம்!
விண்ணப்பிக்கும் முறை:
http://mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி பெற்று, ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
* முதலில் http://mrb.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
* ”Online Registration” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
* அதில் Assistant Surgeon (General) என்ற பதவியை க்ளிக் செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.
* மொபைல் எண் மற்றும் முன்னஞ்சல் முகவரியை பதிவிட வேண்டும். ஏனெனில், மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து பணிக் குறித்த அனைத்துத் தகவல்களும் இருந்து செல்போனில் எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் வாயிலாக மட்டுமே பகிரப்படும்.
* பின்னர் விண்ணப்பதாரர்களின் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் மற்றும் கையெழுத்து ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும்.
கல்வித் தகுதி:
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனத்தில் எம்பிபிஎஸ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பயிற்சி மருத்துவராகக் குறைந்தபட்சம் 12 மாதங்கள் பணியாற்றி இருக்க வேண்டும். தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நவம்பர் மாதத்தில் எழுத்து தேர்வு/ கணினிவழி தேர்வு நடைபெறும். தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் 40 % மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு மணி நேரம் 50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.
எழுத்து தேர்வு - மருத்து சார்ந்த 200 வினாக்களுக்கு 2 மணி நேரம் தேர்வு நடைபெறும். தமிழ்மொழிதகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிற தாள்கள் மதிப்பீடு செய்யபடும்.
மேலும் படிக்க:Chennai Power Shutdown: சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா?