இந்துசமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு 2022.. 10 வது முடித்திருந்தால் போதும்.. உடனே விண்ணப்பியுங்கள்..

By Thanalakshmi V  |  First Published Oct 10, 2022, 5:39 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்திலுள்ள சுவாமிமலை கோவிலில் உள்ள இளநிலை உதவியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் , வரும் 15 ஆம் தேதிக்குள்ள சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் அஞ்சலக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


நிறுவனத்தின் பெயர்: இந்துசமய அறநிலையத்துறை

பணியின் பெயர்: 

Tap to resize

Latest Videos

இளநிலை உதவியாளர் - 2

உதவி மின் பணியாளர் - 1

உதவி பரிச்சாரகர் -2 

ஸ்தானியம் - 1

காலிபணியிடங்கள்: 6

விண்ணப்பிக்க கடைசி தேதி:  இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

www.swamimalai.hrce.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க:தமிழக அரசு வேலை.. காலியாக உள்ள 2,738 கிராம உதவியாளர் பணியிடங்கள்.. 5வது படித்திருந்தால் போதும்

கல்வித் தகுதி: 

இளைநிலை உதவியாளர் - 10 வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவி மின் பணியாளர் - அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்விநிறுவனத்தில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் எலக்ட்ரிக்கல் லைசைன்ஸ் போர்டில் இருந்து ”எச்” தர சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.

உதவி பரிச்சாரகர் - ஆகமவிதியின் படி நெய்வேத்திய பிரசாதங்கள் தயார் செய்து, சுவாமிக்கு எடுத்து சென்று வர வேண்டும். தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஸ்தானியம் - ஆகமப் பயிற்சி பாட சாலைகளில் ஓராண்டுப் பயிற்சிச் சான்றிதழ் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க:வெறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

click me!