10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழை எப்போது பெற்றுக்கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மே மாதம் 6 ஆம் தேதி தொடங்கியது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 9.55 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆனது ஜூன் 17-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க..வெறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
அதன்படி தேர்வு முடிவுகள் வெளியானது. மேலும், துணை தேர்வுகளும் நடத்தப்பட்டு, அதன் முடிவுகளும் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை, வரும் அக்டோபர் 14ஆம் தேதி முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க..ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருஷம் ஆச்சு.. தீபாவளி வாழ்த்து சொல்லவே இல்லை.! திமுகவை வம்புக்கு இழுக்கும் பாஜக