மத்திய ஆயுதப்படையில் 3,960 காலி பணியிடங்கள்.. ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்ட எஸ்எஸ்சி..எப்படி விண்ணப்பிப்பது?

By Thanalakshmi V  |  First Published Aug 13, 2022, 10:56 AM IST

புது டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுத காவல்படைகளில் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான அறிவிப்பை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
 


காலி பணியிடங்கள்:

புதுடெல்லி காவல்துறையில் உதவி ஆய்வாளர், தலைமை காவலர், இணை உதவி ஆய்வாளர் பதவிகளிலல் காலிப்பணியிடங்கள் உள்ளன. மொத்தமாக 340 இடங்களுக்கான தேர்வை அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ளது.  

Tap to resize

Latest Videos

இதே போல், மத்திய ஆயுத காவல்படைகளில் 3960 உதவி ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக 4,300 இடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

இந்தப் பதவிகளுக்கு விண்ணபிக்கும் நபர்கள் குறைந்தபட்சமாக 20 வயது முதல் அதிகபட்சமாக 25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்டி மற்றும் எஸ்சி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் முன்னாள் இராணுவ மற்றும் மத்திய அரசு பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் மூன்று ஆண்டுகள் வரை சலுகை அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  2 ஆண்டுகள் காவல் துறையில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:

இந்தியா, நேபாளம், பூடான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் விண்ணபிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ வளைதளமான https://ssc.nic.in/ என்பதில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

மேலும் படிக்க:மாதம் 55 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அறிவிப்பு !

விண்ணப்பிக்கும் தேதி:

டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுத படையில் ஆட்சேர்ப்பு குறித்தான அறிவிப்பு இந்த மாதம் கடந்த 10 ஆம் தேதி வெளியானது. காலியாக உள்ள பணியிடங்களுக்கு வரும் 30 ஆம் தேதி நள்ளிரவு 11 மணி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்

விண்ணப்ப கட்டணம்:

இந்தத் தேர்வுக்கு விண்ணபிக்க தேர்வு கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். னைத்து வகுப்பைச் சேர்ந்த பெண்கள் / பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர் கட்டணச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணைத்தை ரூபே/விசா/ மாஸ்டர் வங்கிக் கணக்கு அட்டைகள், கடன் அட்டைகள், இணையவழி வங்கிப் பரிமாற்றம், யுபிஐ, ஆகியவை மூலமாகச் செலுத்தலாம்.

தேர்வு : 

இந்த பணியிடங்களுக்கான எழுத்துதேர்வு இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

தேர்வு நடைபெறும் மையங்கள்:

நாடு முழுவதும் 21 மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற உள்ளன. அதில் தமிழகத்தில் 7 மையங்களில் தேர்வுகள் நடைபெறும். புதுச்சேரியில் ஒன்று, ஆந்திரம் 10, தெலுங்கான 3 என அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தென் மண்டல இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ கல்வி நிறுவனத்தின் கீழ் இளம்நிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். டெல்லி காவல்துறை உதவி ஆய்வாளர் (ஆண்) பதவிகளுக்கு ஓட்டுநர் உரிமை கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:டிகிரி முடித்தால் போதும்..தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு !

விண்ணப்பிக்கும் முறை:

1, தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

2, ஆன்லைன் விண்ணப்பபடிவத்தில் விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களது ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படும் மற்றும் கையெழுத்தை பதிவேற்றம் செய்யவேண்டும்.

3,  புகைப்படங்கள் தொப்பி மற்றும் மூக்கு கண்ணாடி அணியாமல் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

முதல் தாள் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

பின்பு உடல் தகுதி மற்றும் மருத்துவ தகுதி தேர்வு நடத்தப்படும்

தகுதி பெற்றவர்கள் இரண்ராம் தாள் எழுத்து தேர்விற்கு அனுமதிக்கப்படுவர்

இதில், தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவ சோதனைக்கு வரவழைக்கப்படுவர்.

மேலும் படிக்க:மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை.. 12 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.. விண்ணப்பிப்பது எப்படி..?

click me!