மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) GD கான்ஸ்டபிள் உடல் தகுதி தேர்விற்கான அனுமதி அட்டை குறித்த முக்கிய தகவல்....
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) GD கான்ஸ்டபிள் கணினி அடிப்படையிலான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அடுத்தக்கட்டமாக நடக்கும் உடற்தகுதி தேர்விற்கான அனுமதி அட்டை (admit card) குறித்த தகவலை விண்ணப்பதாரர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர். கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றி அதனை rect.crpf.gov.in இல் பதிவிறக்கலாம்.
விண்ணப்பதாரர்களுக்கு PET (உடல் திறன் சோதனை), PST (உடல் தரநிலை சோதனை), DME (விரிவான மருத்துவ பரிசோதனை) மற்றும் RME (மதிப்பாய்வு) ஆகியவை விரைவில் நடத்தப்படவுள்ளது. PET தேர்வுக்கான அனுமதி அட்டை ஏப்ரல் 20ஆம் தேதி வெளியிடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வுக்கான இ-அட்மிட் கார்டு தகுந்த நேரத்தில் CRPF இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அதை எப்படி தரவிறக்கம் செய்வது என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
எப்படி தரவிரறக்கம் செய்வது?
இந்த பணியிடங்களுக்கான இ-அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்ய, அவ்வப்போது CRPFஇன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை விண்ணப்பதாரர்கள் பார்வையிட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SSC GD கான்ஸ்டபிள் 2022 தேர்வானது, 2023 ஜனவரி 10 முதல் பிப்ரவரி 14 வரை கணினி அடிப்படையிலான சோதனை முறையில் ஆணையத்தால் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டாய்லெட்டில் மொபைல் பார்க்கும் பழக்கம்! ஆனா அங்கெல்லாம் போன் கொண்டு போனால், எத்தனை நோய்கள் வரும்னு தெரியுமா?