உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி (TNPSC) வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சிறைச்சாலை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் உதவி ஜெயிலர் (ஆண்கள்) மற்றும் உதவி ஜெயிலர் (பெண்கள்) பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கியுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவங்களை tnpsc.gov.in மற்றும் apply.tnpscexams.in என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். படிவங்களை சமர்ப்பிக்க மே 11 கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன், அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களின் அடிப்படை விவரங்களை ஒரு முறை ஆன்லைன் பதிவு முறையில் ₹150 செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
undefined
அதன் பிறகு, அவர்கள் விண்ணப்ப படிவத்தை நிரப்ப தொடரலாம். மொத்தம் 59 காலியிடங்கள் உள்ளன. இதில் 54 ஆண்களுக்கும், ஐந்து பெண்களுக்கும் ஒதுக்கப்படும் என்றும், விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க, ஆணையம் ஜூலை 1-ம் தேதி இரண்டு தாள்களுக்கான எழுத்துத் தேர்வை நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கான விண்ணப்பதாரர்களின் குறைந்த வயது வரம்பு 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 32 ஆண்டுகள் ஜூலை 1, 2023க்குள் இது இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCகள், மற்றும் BCMகள் மற்றும் அனைத்து சாதிகளின் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு வயது வரம்பு இல்லை. மேலும், விண்ணப்பதாரர்கள் அறிவிக்கும் தேதியிலோ அல்லது பதவிக்கு தேர்ந்தெடுக்கும்/ நியமனம் செய்யப்படும் நேரத்திலோ 60 வயதை நிறைவு செய்திருக்கக் கூடாது.
விண்ணப்பிக்க கடைசி தேதி மே 11 ஆகும். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி ஜூலை 01 ஆகும். விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணியிடங்களின் கல்வித் தகுதி பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணைப்பு மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் பணி வேலைவாய்ப்பு; விண்ணப்பிப்பது எப்படி?