மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் பணி வேலைவாய்ப்பு; விண்ணப்பிப்பது எப்படி?

By SG Balan  |  First Published Apr 17, 2023, 4:50 PM IST

மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் பணி வேலைவாய்ப்புக்கு வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு தொடர்பாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைஅறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 14 காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது. தற்காலிக அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த செவிலியர் பணிக்கு தகுதியும் விருப்பமும் கொண்டவர்கள் வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 

டிஜிஎன்எம் (DGNM) அல்லது பி.எஸ்சி. நர்சிங் (B.Sc Nursing) படித்திருப்பவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டியதும் அவசியம் ஆகும். டிப்ளமோ அல்லது டிகிரி படிப்பில் பெற்ற மதிப்பெண் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் இந்தப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

Tap to resize

Latest Videos

SSC தேர்வுக்கு இலவச கோச்சிங்.. எப்படி படிக்கலாம் தெரியுமா? முழு விபரம்

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆன்லைனின் வழிமுறை அளிக்கப்படவில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதனை பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்து மருத்துவமனை முதல்வருக்கு அனுப்ப வேண்டும்.

Madurai Rajaji Government Hospital Nurse Recruitment Application - Download here

முழுமையாக நிரப்பப்பட்ட  விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அம்பையில் பல் பிடுங்கிய விவகாரம்: ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி:

முதல்வர்,

அரசு இராசாசி மருத்துவமனை,

மதுரை - 20. பிரிவு பொது - 8.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.04.2023

click me!