SSC தேர்வுக்கு இலவச கோச்சிங்.. எப்படி படிக்கலாம் தெரியுமா? முழு விபரம்

By Raghupati R  |  First Published Apr 17, 2023, 2:00 PM IST

மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் 7 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களை அறிவித்துள்ளது. 


மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் "ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு 2023" தொடர்பான அறிவிப்பினை கடந்த மாதம் 3-ந்தேதி வெளியிட்டது. 

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் "பி" மற்றும் குரூப் "சி" நிலையில், 7 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களை அறிவித்துள்ளது. இத்தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். 

Tap to resize

Latest Videos

பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வு திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு www. ssc. nic. in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 

கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் 4-ந்தேதி ஆகும். தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு, வருகிற ஜூலை மாதத்தில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் ஒரு மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் 3 மையங்களிலும் நடைபெற உள்ளது. 

இதையும் படிங்க..ஜிஎஸ்டி விதியில் அதிரடி மாற்றம்.. மே 1 முதல் ஜிஎஸ்டி விதிகள் மாறுகிறது - முழு விபரம்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன. இத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் (https: //tamilnaducareerservices. tn. gov. in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த இணையதளத்தில் 'TN Career Services Employment' மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் 'AIM TN' என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, இத்தேர்வுக்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கற்பகம் (பெரம்பலூர்), ரமணசரஸ்வதி (அரியலூர்) தெரிவித்துள்ளனர். மாணவர்கள் இதனை பயன்படுத்தல் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதையும் படிங்க..இனிமே இலவசம் கிடையாது.. ஐபிஎல் சீசனை காசு கொடுத்தா தான் பார்க்க முடியும் - முழு விபரம்

click me!