2022-23 ஆண்டிற்கான எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள குரூப் 'பி'&'சி' பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி 2022-23 ஆண்டிற்கான எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் இன்று முதல் அடுத்த மாதம் 10 ஆம் தேதி இரவு 11 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
undefined
மேலும் படிக்க:பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்.. எப்போது வரை நடைபெறுகிறது..? ஆன்லைனில் மேற்கொள்ளுவது எப்படி..? விவரம் இதோ
இதற்கு விண்ணப்பம் நபர்கள் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி,எஸ்.டி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பிக்க கட்டணமம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பதவிகளுக்கு முதல் நிலை(Tier- I), இரண்டாம் நிலை (Tier- II), மூன்றாம் நிலை(Teir - II) ஆகிய மூன்று முறைகளில் தேர்வு நடைபெறும்.
முதல்நிலை , இரண்டாம் நிலை தேர்வுகள் கணினி வழியில், கொள்குறி வகை வினாக்கள் வடிவில் நடைபெறும். மேலும் பொது விழிப்புணர்வு (General Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல் (English Language and Comprehension) ஆகிய கூறுகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
மேலும் படிக்க:கால்நடை மருத்துவ படிப்புக்கு 12 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.. எப்படி விண்ணப்பிப்பது..? முழு விவரம் இதோ
மூன்றாம் நிலை தேர்வு விரிவான வினாவாக பதிலளிக்கும் வகையில், எழுத்து தேர்வாக நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.