சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.
இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை ஐஐடியில் காலியாக உள்ள GIS Analytics, Data Analyst உள்ளிட்ட பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் 71 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு வரும் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணபிக்க முடியும்.
இதையும் படிங்க : மாணவிகளுக்கு கன்னித்தன்மை சோதனை..! ஆளுநர் புகாரால் தலைமைச் செயலாளருக்கு திடீர் நோட்டீஸ்
கல்வித்தகுதி : இந்த பணிக்கு Urban planning / Remote sensing / Computer science ஆகிய துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Urban planning / Remote sensing / Computer science ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Urban planning / Remote sensing / Computer science ஆகிய துறைகளில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம் : இந்த பணிகளுக்கு விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.
மாதச்சம்பளம் : ரூ.25,00 முதல் ரூ.60,000 வரை
தேர்வு முறை : ஆவணங்கள் சரிபார்ப்பு, தேர்வு, நேர்முக தேர்வு
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான நேரடி இணைப்பு : https://icandsr.iitm.ac.in/recruitment/
மேலும் விவரங்களுக்கு என்ற இணைப்பை கிளிக் செய்து பார்க்கலாம்.
இதையும் படிங்க : இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று.. இந்தியாவில் பார்க்க முடியுமா?