எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 50 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
உதவி பொது மேலாளர், தலைமை மேலாளர், திட்ட மேலாளர், மேலாளர் மற்றும் துணை மேலாளர் பதவிகளுக்கு தகுதியான இந்திய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 50 காலியிடங்கள் உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளம் ரூ. 80,000 முதல் ரூ. 100350 வரை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஒவ்வொரு பதவிக்கும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்புகள் மாறுபடும். மேற்கூறிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ. 750 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதற்கான கடைசி தேதி 05.06.2023 ஆகும்.
கல்வித்தகுதி :
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனம் / வாரியத்தில், விண்ணப்பதாரர்கள் பி.டெக். / எம். டெக். / எம். எஸ்சி. (கம்ப்யூட்டர் சயின்ஸ் / கம்ப்யூட்டர் சயின்ஸ் & இன்ஜினியரிங் / இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி / எலெக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்) அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இதையும் படிங்க : யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து அசத்திய இஷிதா கிஷோர்? யார் இவர்?
முன் அனுபவம் :
மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் IT துறையில் குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் பிந்தைய அடிப்படை தகுதி அனுபவம் பெற்றிருக்க வேண்டும், மேலும் பல தொழில்நுட்பங்கள், தளங்கள் மற்றும் மொழிகளில் ஒருங்கிணைப்புகளை மேம்படுத்துவதில் குறைந்தது 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெரிய நிறுவனங்கள்/ BFSI துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
உதவி பொது மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மென்பொருள் பொறியியல் மற்றும் கட்டிடக்கலை வடிவமைப்பில் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் அடிப்படை தகுதி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தலைமை மேலாளர் பதவிக்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஐடி துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பிந்தைய அடிப்படைத் தகுதி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
உதவி மேலாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதை கடந்திருக்க வேண்டும் மற்றும் இந்த பணியிடத்திற்கான அதிகபட்ச வயது வரம்பு 48 ஆண்டுகள் ஆகும்.
தலைமை மேலாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயதை கடந்திருக்க வேண்டும் மற்றும் இந்த பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 44 ஆண்டுகள் ஆகும்.
திட்ட மேலாளர் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயதை கடந்திருக்க வேண்டும் மற்றும் இந்த பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 38 ஆண்டுகள் ஆகும்.
மேலாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயதை கடந்திருக்க வேண்டும் மற்றும் இந்த பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 38 ஆண்டுகள் ஆகும்.
துணை மேலாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 25 வயதை கடந்திருக்க வேண்டும் மற்றும் இந்த பணியிடத்திற்கான அதிகபட்ச வயது வரம்பு 35 ஆண்டுகள் ஆகும்.
விண்ணப்பக் கட்டணம்:
எஸ்பிஐ ஆட்சேர்ப்பு 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மேலே குறிப்பிடப்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ. 750 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
SBI ஆட்சேர்ப்பு 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து கடைசி தேதி அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது. ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கான கடைசி தேதி 05.06.2023 ஆகும்.
எஸ்பிஐ ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ
இதையும் படிங்க : மெகா வேலைவாய்ப்பு.. இந்தியா போஸ்ட்-ல் 12,828 காலி பணியிடங்கள்.. 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்..