2022-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வில் பெண்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்
ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு சிவில் சர்வீஸ் பணிகளுக்கு யுபிஎஸ்சி சார்பில் ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 யுபிஎஸ்சி தேர்வுக்கான இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் இஷிதா கிஷோர் என்ற தேர்வர் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் கரிமா லோஹியா என்ற மாணவி 2-ம் இடத்தையும், உமா ஹாரதி என்பவர் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும் ஸ்மிருதி மிஸ்ரா என்பவர் 4-வது இடம் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க : UPSC Exam Results: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு.. முதல் 4 இடங்களை பிடித்து அசத்திய பெண்கள் !!
யார் இந்த இஷிதா கிஷோர்?
இஷிதா கிஷோர் பொருளாதார பட்டதாரி. 2017 ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ ராம் காமர்ஸ் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். அதன் பிறகு, எர்ன்ஸ்ட் & யங் நிறுவனத்தில் இடர் ஆலோசனை துறையில் பணியாற்றினார். இஷிதா சுறுசுறுப்பான விளையாட்டு வீராங்கனையாக இருந்துள்ளார். பள்ளிப் பருவத்திலிருந்தே ஆல்-ரவுண்டர் வீராங்கனையாகவும் இஷிதா இருந்துள்ளார்.
மேலும் பல விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளார். இஷிதா தனது மூன்றாவது முயற்சியில் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். யுபிஎஸ்சி தேர்வுக்கு தகுதி பெறுவதற்கான மூன்றாவது கட்டமான நேர்காணல் சுற்றுக்கு அவர் தகுதி பெற்றது இதுவே முதல் முறை. தனது முதல் இரண்டு முயற்சிகளில், யுபிஎஸ்சியின் முதல்நிலை தேர்வில் கூட இஷிதாவால் தேர்ச்சி பெற முடியவில்லை.
2022-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வில் பெண்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது இந்த முறை 5 இடங்களில் 4 பெண்கள் உள்ளனர். யுபிஎஸ்சி தேர்வில் தகுதி பெற வேண்டும் எனில், முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 3-ம் சுற்று பணிநீக்கத்தை தொடங்கிய பிரபல நிறுவனம்.. 2500 பேர் வேலை இழக்கும் அபாயம்