புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கீழ்கண்ட ஒப்பந்தப் பணியிடங்கள் காலியாக உள்ளன. ரூ.13,500 முதல் ரூ.16,500 வரை சம்பளம் வழங்கப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நலவாழ்வு சங்கம் மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெவ்வேறு பணிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைவாய்ப்புக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் இப்பணியிடங்கள் தற்காலிகமானவை என்பதால் வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்பட வாய்ப்பு இல்லை. நிரந்தரப் பணியாக மாறுவதற்கு சாத்தியம் இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
2024 மக்களவை தேர்தலுக்கு ரெடியாகும் திமுக! பாட்காஸ்ட் சீரிஸ் தொடங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வுச் சங்கம், புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சுகாதார மாவட்ட் துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் அலுவலகங்கள் மற்றும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கீழ்கண்ட ஒப்பந்தப் பணியிடங்கள் காலியாக உள்ளன.
23 வயதில் 100 கோடிக்கு அதிபரான வேதாந்த் லம்பா! ஆசியாவின் மிகப்பெரிய கடையை உருவாக்கிய இளைஞர்!
புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம் அளிக்கும் இந்த வேலைவாய்ப்புக்கு 45 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். https://pudukkottai.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கீழே கொடுத்துள்ள இணைப்பை கிளிக் செய்து டவுன்லோட் செய்யலாம்.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 'முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, முள்ளூர், புதுக்கோட்டை' என்ற முகவரிக்கு அஞ்சலில் அனுப்பலாம். அல்லது நேரிலோ வந்தும் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 12.09.2023 (மாலை 5.00 மணி வரை)