பாரத ஸ்டேட் வங்கியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதவிகளுக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. எஸ்பிஐ அறிவித்துள்ள பணியிடங்களை பற்றி இங்கே முழுமையாக காண்போம்.
எஸ்பிஐ எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளமான sbi.co.in ஐப் பார்வையிடுவதன் மூலம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிக்கு செப்டம்பர் 21 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பாரத ஸ்டேட் வங்கியில் 6160 பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
undefined
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பாரத ஸ்டேட் வங்கியின் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 20 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் உள்ளூர் மொழி தேர்வு ஆகியவற்றைக் கொண்டிருக்கும். எழுத்துத் தேர்வில் 100 கேள்விகள் இருக்கும். அதிகபட்ச மதிப்பெண்கள் 100. தேர்வின் காலம் 60 நிமிடங்கள் ஆகும். எழுத்துத் தேர்வுக்கான கேள்விகள் பொது ஆங்கிலம் தேர்வு தவிர 13 பிராந்திய மொழிகளில் அமைக்கப்படும். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தவிர, அசாமிஸ், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளிலும் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். பொது / OBC / EWS வகை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க ரூ.300 கட்டணம் செலுத்த வேண்டும். SC/ST/PWBD வகை விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் தொடர்புடைய விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.
முக்கியமான தேதிகள்
விண்ணப்பம் தொடங்கும் தேதி: 1 செப்டம்பர் 2023
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21 செப்டம்பர் 2023
எழுத்துத் தேர்வு: அக்டோபர்/நவம்பர் 2023
குட் நியூஸ்.. எஃப்டிக்கு 8%க்கும் அதிகமாக வட்டியை உயர்த்திய 3 வங்கிகள்.. என்னென்ன தெரியுமா.?