இந்திய இளைஞர்களை ஈர்த்த சிங்கப்பூர் வேலை வாய்ப்பு விளம்பரம்; வைரல் போஸ்டர்!!

Published : Aug 29, 2023, 04:23 PM IST
இந்திய இளைஞர்களை ஈர்த்த சிங்கப்பூர் வேலை வாய்ப்பு விளம்பரம்; வைரல் போஸ்டர்!!

சுருக்கம்

இந்தியாவில் உணவகத்தில், சர்வீஸ் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு குறைந்த வருமானமே கிடைக்கிறது. இதுவே சிங்கப்பூர் உள்பட வெளிநாடுகளில் ஒப்பிட்டால் அதிகமான சம்பளம் கொடுக்கப்படுகிறது.

சமீபத்தில் சிங்கப்பூரின் உணவகம் ஒன்று வேலைக்கு ஆட்கள் வேண்டும் என்று அழைப்பு விடுத்து இருந்தது. தற்போது இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வேலை வாய்ப்பு பல இந்திய இளைஞர்களை ஈர்த்து வருகிறது. உணவகத்தில் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கும் சலுகைகள், பலன்கள், விரிவான ஊதிய பட்டியல் ஆகியவை தான் இதற்குக் காரணம்.  

சிங்கப்பூரின் ஒரு உணவகத்திற்கு வெளியே உள்ள விளம்பரத்தை கடந்த வெள்ளிக்கிழமை காப்பர் சிங் என்பவர் தனது டிவிட்டரில் பதிவேற்றம் செய்து இருக்கிறார். டிவிட்டர் தலைப்பில் இது ஒரு உணவக வேலை வாய்ப்பு, ஆனால் அவர்கள் அளித்து இருக்கும் சம்பளத்தை என்னால் நம்பவே முடியவில்லை''  என்று பதிவிட்டுள்ளார். சிங்கப்பூரில் வேகமாக வளர்ந்து வரும் கொரிய உணவகமான அஜும்மா கொரியன் உணவகம் தான் இதற்கான விளம்பரத்தை கொடுத்து இருந்தது.

பகுதி நேர ஊழியர்களுக்கு விளம்பரப்படுத்தப்பட்ட ஊதியமாக ஒரு மணி நேரத்திற்கு 10 முதல் 15 டாலர் (இந்திய மதிப்பில் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 600 முதல் ரூ. 900) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர் நலன்களில் மருத்துவச் சலுகைகள், உணவு அலவன்ஸ், கல்வி விடுப்பு, ஆண்டுக்கு இருமுறை போனஸ், பணியாளர் படிப்புக்கான ஸ்பான்சர்ஷிப் ஆகிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.  மேலும், மருத்துவப் பயன்களில் பரிசோதனைக்கான மானியங்கள், ஆண்டுக்கு ஒரு முறை பற்களை பரிசோதித்துக் கொள்வது என்று பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. 

Asst. Loco Pilot உள்ளிட்ட 4 பணிகளுக்கு ஆட்கள் தேவை.. ரயில்வே துறையில் வேலை - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

இந்த வேலை வாய்ப்பு விளம்பரத்தைப் பார்த்த பிறகு இந்தியாவில் வழங்கப்படும் சலுகைகளைப் பற்றி நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். வளர்ந்த நாடுகளில் ஒரு மணிநேர ஊதியம் 10 முதல் 15 டாலர்  வரை இருப்பதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர். 

இந்த பதிவுகளைப் பார்த்த இந்தியர்இளைஞர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். தங்களது ஊழியர்களை கவனித்துக் கொள்ளும் நிறுவனம் தான் நல்ல நிறுவனம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ரூ.1,40,000 வரை சம்பளம்.. மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு.. முழு விவரம் இதோ..

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

RRB வேலைவாய்ப்பு Big Alert: இன்று விண்ணப்பிக்காவிட்டால் வாய்ப்பு போகும்!
CSIR UGC NET தேர்வர்களே அலர்ட்! உங்கள் தேர்வு மையம் எங்கே? வெளியானது முக்கிய அறிவிப்பு!