Asst. Loco Pilot உள்ளிட்ட 4 பணிகளுக்கு ஆட்கள் தேவை.. ரயில்வே துறையில் வேலை - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

Ansgar R |  
Published : Aug 29, 2023, 01:11 PM IST
Asst. Loco Pilot உள்ளிட்ட 4 பணிகளுக்கு ஆட்கள் தேவை.. ரயில்வே துறையில் வேலை - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

சுருக்கம்

ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு, மேற்கு ரயில்வேயில் பணி (RRC-WR) செய்ய தகுதியான  ஆட்களை தேர்வு செய்யவுள்ளது, அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை தற்போது ரயில்வே வெளியிட்டுள்ளது.

பணி விவரம் 

Asst. Loco Pilot
Technician- III
Junior Engineer
Train Manager 

வயது வரம்பு 

18 முதல் 42 (UR வகுப்புக்கு மட்டும்) வயது வரை உள்ள தகுதியான நபர்கள் மேற்குறிய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

18 முதல் 45 (OBC வகுப்புக்கு மட்டும்) வயது வரை உள்ள தகுதியான நபர்கள் மேற்குறிய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

18 முதல் 47 (ST/SC வகுப்புக்கு மட்டும்) வயது வரை உள்ள தகுதியான நபர்கள் மேற்குறிய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை 

ஆன்லைன் மூலம் மட்டுமே இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதி உள்ளவர்கள் www.rrc-wr.com என்ற இணையதளத்திற்கு சென்று GDCE என்று கொடுக்கப்பட்டுள்ள நோட்டிபிகேஷன் உள்ளே சென்று அப்ளை நொவ் என்பதை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க கடைசி நாள் 

நாளை மறுநாள் 31 ஆகஸ்ட் வரை இந்த பணிக்காக விண்ணப்பிக்க முடியும், ஆகவே தகுதி உள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

கூடுதல் தகவல்களை பெற மேலே கூறியுள்ள இணையதளத்தை பயனர்கள் காணலாம். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Job: ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
Job Vacancy: டிகிரி வேண்டாம், 10 ஆம் வகுப்பே போதும்! ரூ.57,000 சம்பளத்துடன் மத்திய அரசு பணி காத்திருக்கு.! Apply Now