அமேசான் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்
பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தின்போது, பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்தார். அந்த வகையில், அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு, உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸி, இந்தியாவில் மேலும் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்வதாக அறிவித்தார்.
இந்த நிலையில், அமேசான் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமான விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
undefined
காலிப் பணியிட விவரம்
Support Engineer III L4 Pooling, Global Store பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக அமேசான் இந்தியா அறிவித்துள்ளது. அமேசான் குளோபல் ஸ்டோர் ஒரு அனுபவமிக்க Application Support Engineer பணிக்கான ஆட்களை தேர்வு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி இடம்
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
அடிப்படை தகுதிகள்
** இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மென்பொருள் உருவாக்கம் அல்லது தொழில்நுட்ப ஆதரவு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
** troubleshooting and debugging technical systems இல் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்
** Unix மற்றும் scripting in modern program languagesஇல் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்
விருப்பத் தகுதிகள்
** இணைய சேவைகள், விநியோகிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் இணைய பயன்பாட்டு மேம்பாடு பற்றிய அறிவு
** வன்பொருள் மற்றும் மென்பொருள் பராமரிப்பதில் அனுபவம்
** REST இணைய சேவைகள், XML, JSONஇல் அனுபவம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
கல்வி தகுதி
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
4,451 வங்கி காலியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இதோ
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் அமேசான் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இங்கு செய்யலாம்.
https://www.amazon.jobs/en/jobs/2432667/support-engineer-iii-l4-pooling-global-store என்ற இணையதள பக்கத்தில் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.