TNPSC : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்போது தெரியுமா.? வெளியான முக்கிய அறிவிப்பு

By Raghupati R  |  First Published Sep 2, 2023, 10:27 AM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.


தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை  நிரப்ப, குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான தேர்வுகளும், இதர துறை சார்ந்த தேர்வுகளையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆன டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு ஆண்டுதோறும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒரே தேர்வாக நடத்தப்பட்டு, நேர்காணல் எதுவும் இல்லாமல் தேர்வாகும் அரசுப் பணி என்பதால், இந்தத் தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம்.

Latest Videos

undefined

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கக்கூடிய குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குட் நியூஸ்.. எஃப்டிக்கு 8%க்கும் அதிகமாக வட்டியை உயர்த்திய 3 வங்கிகள்.. என்னென்ன தெரியுமா.?

குரூப் 1 பதவிகளில் காலியாக இருக்கும் 32 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனவே அதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த பணியிடத்துக்கான முதல் நிலை தேர்வு வருகிற நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதத்தில் 384 ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பணியிடங்களுக்கும், அடுத்த மாதத்தில் (அக்டோபர்) 400 தொழில்நுட்ப பணியிடங்களுக்கும் என 13 வகையான துறை சார்ந்த காலி பணியிடங்களுக்கும் அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அட்டவணையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு போட்டித்தேர்வர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.10க்கு 1000 ஜிபி டேட்டா.. இலவச அழைப்புகள்.. பிஎஸ்என்எல்லின் சூப்பரான ரீசார்ஜ் திட்டம்

click me!