10, 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் அஞ்சல் துறையில் கை நிறைய சம்பளத்தில் வேலை.. விவரம் இதோ !!

By Thanalakshmi V  |  First Published Oct 12, 2022, 1:32 PM IST

இந்திய அஞ்சலகத் துறையில் காலியாக உள்ள போஸ்ட்மேன் உள்ளிட்ட 98,000 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு  ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 
 


நிறுவனத்தின் பெயர்: India Post department

காலி பணியிடங்கள்:  98,083

Latest Videos

undefined

பணியின் பெயர்: Posts Postman, male guards , Multi Tasking Staff

பணியிடம்: 23 மாநிலங்கள் 

பணியின் விவரம்: 

 Post Man - 59,099

Male Guards - 1,445 

Multi Tasking Staff - 37,539

மேலும் படிக்க:ஹாப்பி நியூஸ்.. மதுரை - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்.. என்னென்ன ஸ்பெஷல் அம்சங்கள் ..?
 
விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

மேல் குறிப்பிட்டு பணிக்கான விண்ணப்ப பதிவு இந்த மாதம் முதல் தொடங்கியுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: 

indiapost.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தினை பெற்று, அதனை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: 

விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 - 32 இருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் இருந்து சலுகை வழங்கப்பட்டுள்ளது. 

கல்வித் தகுதி: 

Postman, Mailguard     : அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனத்தில் 10 அல்லது 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். MTS பணிக்கு கூடுதலாக கணினி அறிவு இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் Post Man பணிக்கு ரூ.35,370, Mail guard பணிக்கு ரூ.33,718 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேலும் படிக்க:திருப்பதியில் இந்த தினங்களில் அனைத்து தரிசனமும் ரத்து.. 12 மணி நேரம் கோவில் மூடல்.. என்ன காரணம் தெரியுமா..?
 

click me!