NLC யில் காலி பணியிடங்கள்.. பொறியியல் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்

By Thanalakshmi VFirst Published Aug 13, 2022, 12:33 PM IST
Highlights

மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி காப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 

காலி பணியிடங்கள்: 

காலியாக உள்ள இன்ஜினியரிங் மற்றும் டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளில் காலியாக உள்ள இடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இஞ்ஜினியரிங் பிரிவில் 201 பணியிடங்கள், இஞ்ஜினியரிங் இல்லாத பிரிவில் 105 பணியிடங்கள், டெக்னீசியன் வேலைகளுக்கான 175 பதவிகள் என மொத்தம் காலியாக உள்ள 481 இடங்கள் Apprentice-ஆக தேர்தெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வி தகுதி மற்றும் நிபந்தனைகள்:

விண்ணப்பத்தாரர்கள் பொறியியல் மற்றும் தொழில்நூட்ப பட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் கல்லூரி படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். 

ஓராண்டு அல்லது அதற்கு மேல் பணியில் முன் அன்பவம் இருப்பவர்களாக இருக்க கூடாது.

விண்ணப்பதாரர் தற்போது எந்த ஒரு நிறுவனத்திலோ பணி செய்பவர்களாக இருத்தல் கூடாது 

விண்ணபிக்கும் தேதி: 

அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள்  இந்த மாதம் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க:மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை.. 12 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.. விண்ணப்பிப்பது எப்படி..? 

விண்ணப்பிக்கும் முறை:

www.nlcindia.in என்ற இணையதளத்திற்கு முதலில் செல்லவும்

பின்பு அதில் Careeers பக்கத்திற்கு சென்று விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்யவும்

வரும் 24 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து பிரிண்ட் ஒன்று எடுத்துக்கொள்ள வேண்டும். 

விண்ணப்பத்தாரரின் கையொப்பமிட்ட விண்ணப்பத்துடன், கேட்கப்பட்டிருக்கும் அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து இந்த மாதம் 31 ஆம் தேதிக்கும் அஞ்சல் மூலமாக அனுப்பிருக்க வேண்டும் 

அனுப்ப வேண்டிய முகவரி:

பொது மேளாளர்,

நிலம் எடுப்பு அலுவலகம்,

என்.எல்.சி.இந்தியா நிறுவனம்,

நெய்வேலி-607803.

Office of the General Manager,
Land Acquisition Department,
N.L.C India Limited.
Neyveli – 607 803

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய நகல்கள்:

1,பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் 

2, கல்வி மாற்றுச் சான்றிதழ் 

3, சாதி சான்றிதழ் 

4, டிப்ளமோ, பட்ட படிப்பு தேர்ச்சி டிகிரி சான்றிதழ் 

5, மாற்றுத்திறனாளி என்றால் அதற்கான சான்றிதழ் 

6, முன்னாள் இராணுவத்தினர் சான்றிதழ்

மேலும் படிக்க: டிகிரி முடித்தால் போதும்..தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு !

முக்கிய குறிப்பு: 
 
பயிற்சி தேர்வு முறை குறித்து விண்ணப்பதாரர்களுடன் கடித போக்குவரத்து எதுவும் நடைபெறாது என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவர்களின் விவரங்களை விண்ணப்பதரர்கள் அனைவரும் நிலம் எடுப்பு துறை அலுவலகத்தினை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. NLCILல் நிரந்தர வேலைவாய்ப்பிற்கான உத்திரவாதம் ஏதும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் இணைக்கப்பட்டுள்ள சான்றிதழ்கள் சரிபார்த்தலின் அடிப்படையில்  தகுதி உள்ளவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டு Selected List of candidates யல் நிலம் எடுப்பு அலுவலக தகவல் பலகை, கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தின் தகவல் பலகையிலும் மற்றும் www.nlcindia.in என்ற இணையதளத்திலும் உத்தேசமாக 23.09.2022 அன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!