NEET UG Result 2022 : நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகிறது தெரியுமா? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Published : Aug 26, 2022, 09:58 AM ISTUpdated : Aug 26, 2022, 10:01 AM IST
 NEET UG Result 2022 : நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகிறது தெரியுமா? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

சுருக்கம்

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி வெளியிடப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி வெளியிடப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 497 நகரங்களில் 3,800க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.  நீட் தேர்வை எழுத மொத்தம் 18 லட்சத்து 72,341 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். 18 லட்சத்துக்கும் அதிகமானோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தது இதுவே முதன்முறை. இந்நிலையில் விண்ணப்பித்தவர்களில் 95% பேர் தேர்வை எழுதினர்.

இதையும் படிங்க;- பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் : தமிழக அரசின் வழிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உட்பட 18 நகரங்களில் நடக்கும் தேர்வில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை தேசிய தேர்வு முகமை இன்று அறிவித்துள்ளது.

அதன்படி, நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் இளநிலை தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்புகள் வரும் 30-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க;-  TANCET 2022: டான்செட் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது!!

PREV
click me!

Recommended Stories

TNPSC: நல்ல செய்தி சொன்ன தமிழ்நாடு அரசு.! டிப்ளமோ/ ITI படித்தவர்களுக்கு ஜாக்பாட்!
TNPSC Group 4: குட் நியூஸ் சொன்ன TNPSC.! துள்ளிக் குதித்த குரூப் 4 தேர்வர்கள்.!