2023ம் ஆண்டு நீட் முதுகலை தேர்வு ஒத்திவைப்பு தொடர்பான விசாரணையை உச்சநீதிமன்றம் தொடங்கியது.
2023ம் ஆண்டு நீட் முதுகலை தேர்வு ஒத்திவைப்பு மனு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. இந்த தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனு நீதிபதிகள் ரவீந்திர பட், தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மார்ச் 5, 2023 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ள தேர்வை ஒத்திவைக்கவும், இன்டர்ன்ஷிப் கட் ஆஃப் தேதியை நீட்டிக்கவும் நீட் முதுகலை தேர்வு ஆர்வலர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்டர்ன்ஷிப் படித்து வரும் மாணவர்கள் சிலர், தேர்வுக்கு தயாராவதற்கு நேரம் கிடைப்பதில் சிரமம் இருப்பதாக கூறி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீட் முதுகலை தேர்வு தேர்வு பல்வேறு எம்டி / எம்எஸ் (MD /MS) மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளில் சேர நடத்தப்படும். ஹால் டிக்கெட் பிப்ரவரி 27 அன்று வெளியிடப்பட்டு மார்ச் 31, 2023 அன்று முடிவு அறிவிக்கப்படும். நீட் முதுகலை தேர்வு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, எந்தெந்த மாநிலங்கள் மனுவைத் தள்ளுபடி செய்தன என்று நீதிபதி ரவீந்திர பட் கேள்வி எழுப்பினார். தெலுங்கானா உயர் நீதிமன்றத்தைத் தவிர வேறு யார் இந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர் என்று மனுதாரரிடம் நீதிபதி பட் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க..நாம் தமிழர் கட்சியில் இணையும் காயத்ரி ரகுராம்.? நேற்று திருமா.. இன்று சீமான் - சந்திப்பின் பின்னணி என்ன.?
அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் அங்கு இருப்பவர்கள் பங்கேற்கலாம் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது என்று பதிலளித்தார். இதனையடுத்து என்.பி.இ சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட் ஆஜரானார். நீட் முதுகலை தேர்வு 2023க்கு 2 லட்சத்து 9 ஆயிரத்து 29 பேர் விண்ணப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையில் நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க..அதெல்லாம் பழசு, இது ஈரோடு பார்முலா..! கமல் ஹாசன் கால்ஷீட் எவ்வளவு.? பங்கமாக கலாய்த்த செல்லூர் ராஜு
இதையும் படிங்க..ச்சீ.. மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை.. உடந்தையாக இருந்த அண்ணன் - கண்ணீருடன் புகார் கொடுத்த மகள்