கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிபிஎஸ்இ பொது தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டன. தற்போது கொரான பாதிப்பு முழுவதுமாக குறைந்துள்ள நிலையில், தற்போது வழக்கமான முறையில் இந்த ஆண்டுக்கான பொது தேர்வுகள் இன்று துவங்குகின்றன.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்க உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிபிஎஸ்இ பொது தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டன. தற்போது கொரான பாதிப்பு முழுவதுமாக குறைந்துள்ள நிலையில், தற்போது வழக்கமான முறையில் இந்த ஆண்டுக்கான பொது தேர்வுகள் இன்று துவங்குகின்றன. 12ம் வகுப்பில் மொத்தம் 16, 96, 770 பேர் தேர்வெழுதிகின்றனர். இதில், மாணவர்கள் 9,51,332 பேரும், மாணவிகள் 7,45, 433 பேரும் உள்ளனர். 7240 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன.
undefined
மேலும் நாடு முழுவதும் மொத்தம் 6,759 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. அதன்படி CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5ம் தேதி வரையும் நடக்கவுள்ளன. CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குவதையொட்டி, மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் காலை 10.30 மணிக்கு தொடங்கி, பகல் 1.30 மணி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அரை மணி நேரத்துக்கு முன்னதாக வரவேண்டும் என்றும், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் படிக்க 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என அந்த வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.