தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (NABARD) காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (NABARD)
காலி பணியிடங்கள்: 177
பணியின் பெயர்:
வளர்ச்சி அலுவலர்- 173
வளர்ச்சி அலுவலர் (இந்தி) - 4
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள நபர்கள் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பதவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து பின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க:டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி மாற்றம்.. வெளியான முக்கிய அறிவிப்பு.!
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்கும் போது கட்டணமாக ரூ.450 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி, முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
வயது வரம்பு, விண்ணப்பிகும் செயல்முறை, தேர்வு செய்யப்படும் முறை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு வரும் 15ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.32,000 அளவில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
வளர்ச்சி அலுவலர் பதவிகளுக்கான 173 காலியிடங்களில் பொது பிரிவினருக்கு 80 இடங்களும், ஓபிசி வகுப்பினருக்கு 46 இடங்களும், பட்டியல் வகுப்பினருக்கு 21 இடங்களும், பட்டியல் பழங்குடியினருக்கு 11 இடங்களும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 15 இடங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி உதவியாளர் (இந்தி) பதவியில் காலியாக உள்ள 3 இடங்கள் பொது பிரிவினருக்கும், 1 இடம் பட்டியல் பழங்குடியின வகுப்பினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:SSC யின் ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. எப்படி விண்ணப்பிப்பது.. விவரம் இங்கே