மத்திய பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

By Narendran S  |  First Published Feb 7, 2023, 12:04 AM IST

மத்திய பாதுகாப்பு துறையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


மத்திய பாதுகாப்பு துறையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. \

பணி விவரம்: 

Latest Videos

undefined

பதவிகள்:

  • டிரேஸ்மேன் (Tradesman)
  • ஃபையர்மேன் (Fireman)

காலிப்பணியிடங்கள்: 

  • டிரேஸ்மேன் (Tradesman) - 1249
  • ஃபையர்மேன் (Fireman) - 544

மொத்த பணியிடங்கள் - 1793

இதையும் படிங்க: இந்தியா எரிசக்தி வார மாநாடு: பிரதமர் நரேந்திர மோடிக்கு மெஸ்ஸி டிஷர்ட் பரிசு

பணியிட விவரம்: 


கல்வித் தகுதி: 

  • டிரேஸ்மேன் பணியிடங்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 10வது அல்லது 12  ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • மேலும், தொழில்துறை சார்ந்து பயிற்சி படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • ஃபையர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க 10வது அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 

  • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 
  • 25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 

இதையும் படிங்க: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியதன் எதிரொலி.... தமிழகத்திற்கு குழுவை அனுப்பியது மத்திய அரசு!!

சம்பள விவரம்:

  • டிரேஸ்மேன் மேட் (Tradesman Mate) - ரூ. 18,000 முதல் ரூ.56,900 வரை
  • ஃபையர்மேன் - Level 2  - ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை 

தேர்வு செய்யும் முறை: 

  • இதற்கு உடற்தகுதி தேர்வு, திறனறிவு தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

  • ஆன்லைனின் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 
  • https://www.aocrecruitment.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 

கடைசி தேதி:

  • 26.02.2023
click me!