பணியாளர் தேர்வு ஆணையமான எஸ்எஸ்சி சிஜிஎல் தேர்வுக்கான தேதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் (Staff Selection Commission) ஆனது ஆண்டுதோறும் மத்திய அரசு சேவை பணிகளுக்கு பல்வேறு துறைக்கு பல பிரிவின் கீழ் தகுதியான நபர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது.
எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) லெவல் 2க்கான தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in இல் கால அட்டவணை பதிவிறக்கம் செய்யப்படும்.
undefined
2022 டிசம்பர் 1 முதல் 13 வரை, எஸ்எஸ்சி சிஜிஎல் லெவல் 1 தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வின் மூன்று சுற்றுகள் ஆணையத்தால் நடத்தப்படுகின்றன. பட்டியலிடப்பட்ட வேட்பாளர்கள் தொடர்ச்சியான சுற்றுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். டிசம்பர் 2022 தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள் எஸ்எஸ்சி சிஜிஎல் 2022 லெவல் 1 முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு ஆரம்பம்: மார்ச் 2, 2023
தேர்வு முடிவு: 7 மார்ச் 2023
எஸ்எஸ்சி சிஜிஎல் 2023 தேர்வு முறையின்படி லெவல் 2 தேர்வுகளுக்கு கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) ஆன்லைனில் நடத்தப்படும். தேர்வு நான்கு பகுதிகளில் மையமாக இருக்கும். அது பின்வருமாறு, அளவு திறன், புள்ளியியல், பொது ஆய்வுகள் (நிதி மற்றும் பொருளாதாரம்), மற்றும் ஆங்கில மொழி மற்றும் புரிதல் ஆகியவை ஆகும்.
இதையும் படிங்க..நீலகிரி மாவட்டத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலை.. மாதம் ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் - முழு விபரம் இதோ !!