தமிழ்நாடு வருமான வரித் துறையில் அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வருமான வரித் துறை தற்போது பல்வேறு காலியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. வருமான வரி ஆய்வாளர்கள், வரி உதவியாளர்கள், பல பணிப் பணியாளர்கள் என பல்வேறு காலியிடங்களை நிரப்ப உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 72 வருமான வரி ஆய்வாளர்கள், வரி உதவியாளர்கள், பல்பணிப் பணியாளர்கள் பணியிடங்களை நியமிக்க வருமான வரித் துறை தமிழ்நாடு முடிவு செய்துள்ளது. விண்ணப்பதாரர்கள் தகுதி, வயது வரம்பு,தேர்வு மற்றும் சம்பள விவரங்கள் பற்றிய விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
அமைப்பு: வருமான வரித்துறை, தமிழ்நாடு
காலியிடம்: 72
தொடக்க தேதி: 14.01.2023
கடைசி தேதி: 06.02.2023
தகுதி: 10வது, பட்டம் (வேலைகேற்ப)
சம்பளம் மாதம்: ரூ.5200 முதல் 34800
வேலை இடம்: தமிழ்நாடு & புதுச்சேரி
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
பதவியிடங்கள்:
வருமான வரி ஆய்வாளர்கள் - 28
வரி உதவியாளர்கள் - 28
மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் - 16
தகுதி விவரங்கள்:
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10வது, பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும் இதுபற்றி விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பதவியின் பெயர் மற்றும் தகுதி:
வருமான வரி ஆய்வாளர் - பட்டம்
வரி உதவியாளர் - பட்டம்
மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் - 10வது
வயது வரம்பு:
விண்ணப்பதாரரின் வயது வரம்பு 18 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.
பதவியின் பெயர் மற்றும் வயது வரம்பு:
வருமான வரி ஆய்வாளர்கள் - 18 முதல் 30 வரை
வரி உதவியாளர்கள் - 18 முதல் 27 வரை
மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் - 18 முதல் 27 வரை
சம்பள விவரங்கள்:
அடிப்படை ஊதியம் ரூ.5200-34800 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய அளவு:
வருமான வரி ஆய்வாளர்கள் - 9300-34800
வரி உதவியாளர்கள் - 5200-20200
மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் - 5200-20200
தேர்வு முறை:
மெரிட் லிஸ்ட், ஸ்போர்ட்ஸ் டிரெயில் / மெடிக்கல் டெஸ்ட் மூலம் தேர்வு செயல்முறை நடத்தப்படும்.
விண்ணப்ப விவரங்கள்:
விண்ணப்பம் ஆன்லைன் முறையில் அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..நீலகிரி மாவட்டத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலை.. மாதம் ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் - முழு விபரம் இதோ !!