சவுத் இந்தியன் வங்கி ப்ரோபேஷனரி கிளார்க் வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. கிளார்க் பணிகளுக்கான தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம் போன்றவற்றை இங்கு பார்க்கலாம்.
சவுத் இந்தியன் வங்கி ப்ரோபேஷனரி கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆன்லைன் மூலம் 01.02.2023 முதல் 12.02.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: சவுத் இந்தியன் வங்கி
பதவியின் பெயர்: ப்ரோபேஷனரி கிளார்க்ஸ் பதவிகள்
பணியிடங்கள்: குஜராத், மகாராஷ்டிரா, கோவா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி என்சிஆர் (NCR)
தொடக்க நாள்: 01.02.2023
கடைசி தேதி: 12.02.2023
கல்வி தகுதி:
- வழக்கமான படிப்பின் கீழ் கலை / அறிவியல் / வணிகம் / பொறியியல் பிரிவில் பட்டப்படிப்பு.
- குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் X/ SSLC, XII/ HSC/Diploma* & பட்டப்படிப்பு.
- பொறியியல் பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே டிப்ளமோ பொருந்தும்.
வயது எல்லை:
- 26 ஆண்டுகளுக்கு மேல் இல்லை. விண்ணப்பதாரர் 01.02.1997க்கு முன்னும், 31.01.2005க்கு பின்னரும் (இரு நாட்களையும் சேர்த்து) பிறக்கக்கூடாது.
- SC/ST விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்படும்.
சம்பள விவரம்:
- ஐபிஏ அங்கீகரிக்கப்பட்ட ஊதிய அளவு ரூ. 17900 - 1000/3 – 20900 - 1230/3 – 24590 - 1490/4 – 30550 - 1730/7 – 42660 - 3270/1 – 45930 - 1990/1 – 47920
- நடைமுறையில் உள்ள திட்டத்தின்படி எழுத்தர்களுக்குப் பொருந்தக்கூடிய செயல்திறன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகள் (பிஎல்ஐ) மற்றும் பிற அனைத்துப் பலன்களுக்கும் தகுதி பெறுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
*ஆன்லைன் டெஸ்ட்
*நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம் /தேர்வுக் கட்டணம்:
*பொதுப் பிரிவு - ரூ.800/-
*ST SC/ ST பிரிவு - ரூ.200/-
குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.
கிளார்க் பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது?:
விண்ணப்பதாரர்கள் வங்கியின் இணையதளமான www.southindianbank.com மூலம் 01.02.2023 முதல் 12.02.2023 வரை மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும் மேலும் வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.
*விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 01.02.2023
*விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2023
*தேர்வு தேதி: 18.02.2023
இதையும் படிங்க..நீலகிரி மாவட்டத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலை.. மாதம் ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் - முழு விபரம் இதோ !!