தமிழ்நாடு ஒருங்கிணைந்த நூலக பணிகள் / சாரிநிலைப் பணிகளில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த நூலக பணிகள் / சாரிநிலைப் பணிகளில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி நூலகர் பணிக்கு நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இதே துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
நூலகர் மற்றும் தகவல் அலுவலர், மாவட்ட நூலக அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நூலகர் பணியில் ஐந்தாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். மாவட்ட நூலக அலுவலர் பணியிடத்திற்கு மூன்றாண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு விண்ணப்பிக்க நூலக அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் உள்ளிட்ட பிரிவினர் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
நேர்முகத் தேர்வு உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏனையோர்க்கு அதிகபட்ச வயதுவரம்பு 37 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.
கல்லூரி நூலகர் பணிக்கு ஏனையோர் 59 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்களுக்கு விண்னப்பிக்க ஏனையோர் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
கல்லூரி நூலகர் - மாதம் ரூ.57,700 முதல் ரூ. 2,11,500 வரை ஊதியமாக வழங்கப்படும்.
நூலகர் மற்றும் தகவல் அலுவலர் (அண்ணா நூற்றாண்டு நூலகம்) - மாதம் ரூ.56,100 முதல் ரூ. 2,05,700 வரை ஊதியமாக வழங்கப்படும்.
மாவட்ட நூலக அலுவலர் - மாதம் ரூ.56,100 முதல் ரூ. 2,05,700 வரை ஊதியமாக வழங்கப்படும்.
நூலக உதவியாளர் - மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை ஊதியமாக வழங்கப்படும்.
நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் நிலை - மாதம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
நிரந்தரப் பதிவுக்கட்டணம் - ரூ.150
நேர்முகத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு - ரூ.200
நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு மட்டும் - ரூ.100
இந்தப் பணியிடத்திற்கான தேர்வு சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, கணினி வழி தேர்வு ,நேர்காணல்/ வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
www.tnpscexams.in / www.tnpsc.gov.in- ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.