
எல்ஐசி நிறுவனம் அறிவித்த 300 உதவி நிர்வாக அலுவலர் (Assistant Administrative Officer) பணியிடத்திற்கான விண்ணப்ப செயல்முறை இன்றுடன் முடிவடைகிறது. இளநிலைப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு விவரம் உள்ளே;-
பணி: உதவி நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer)
மொத்த காலியிடங்கள்: 300
கல்வித் தகுதி: பி.ஏ., பி.எஸ்.சி, பி.காம் போன்ற இளநிலைப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 1.1.2023 தேதியின்படி குறைந்தபட்சம் 21 முடிந்திருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
மாதம் சம்பளம்: ரூ.53,600
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்ற தேர்வர்கள் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பம் செய்து எப்படி: https://licindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.85 + இதர கட்டணங்கள். இதர பிரிவினர் ரூ.700 + இதர கட்டணங்கள். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். மேலும், திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
ஆன்லைனில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: 17.2.2023
ஆன்லைனில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: 18.3.2023
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.1.2023