CRPF-ல் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கடைசி தேதி எப்போது? முழு விவரம் உள்ளே

By Ramya s  |  First Published May 10, 2023, 5:52 PM IST

சி.ஆர்.பி.எஃப்-ல் காலியாக உள்ள சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.


மத்திய ரிசர்வ் போலீஸ் படையான சிஆர்பிஎஃப்-ல் உள்ள காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியிட விவரம்

Tap to resize

Latest Videos

மொத்த பணியிடங்கள் : 212

சப் இன்ஸ்பெக்டர் (RO) – 19 பணியிடங்கள்

சப் இன்ஸ்பெக்டர் (Techinical)- 5 பணியிடங்கள்

சப் இன்ஸ்பெக்டர் (Civic- Male) – 20 பணியிடங்கள்

அசிஸ்டெண்ட் சப் இன்ஸ்பெக்டர் (Technical)- 146 பணியிடங்கள்

 அசிஸ்டெண்ட் சப் இன்ஸ்பெக்டர் Draughtsman – 15 பணியிடங்கள்

இதையும் படிங்க : தொடக்க கல்வி பட்டய தேர்வு.. இன்னும் 3 நாட்களே உள்ளது.. உடனே அப்ளை பண்ணுங்க..

கல்வித்தகுதி : 10, 12, டிப்ளமோ, பட்டம் (B.sc, B.E, B.Tech)

வயது வரம்பு : 18 முதல் 30 வயது வரை குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கட்டணம் :

சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு : ரூ. 200

அசிஸ்டெண்ட் சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு : ரூ. 100

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி தேதி மே 21 ஆகும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க நேரடி இணைப்பு இணைப்பு

தேர்வு முறை: தேர்வானது எழுத்துத் தேர்வு (CBT), உடல் தரநிலைத் தேர்வு/ உடல் திறன் தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் விரிவான மருத்துவப் பரிசோதனை (DME) ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?

  • அதிகாரப்பூர்வ இணையதளம் rect.crpf.gov.in ஐப் பார்வையிடவும்
  • முகப்புப் பக்கத்தில், "Click here for applying to the post of Signal staff” என்பதை கிளிக் செய்யவும்.
  • பதிவு செய்து விண்ணப்பத்துடன் தொடரவும்
  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்
  • கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
  • படிவத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரிவான அறிவிப்பை rect.crpf.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  பார்க்கலாம்.

விரிவான அறிவிப்பின் இணைப்பு இதோ

இதையும் படிங்க : கர்நாடக தேர்தல்.. வாக்குப்பதிவு மையத்திலேயே குழந்தை பெற்றெடுத்த பெண்..

click me!