மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தபால்துறை பெரிய அளவிலான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் போஸ்ட்மேன் (Postman) 59,099 பேரும், மெயில்கார்ட் (Mail Guard) பணிக்கு 1,445 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தபால் துறையில் மொத்தம் 60,544 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான கல்வி தொகுதி விவரமும் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தபால்துறை பெரிய அளவிலான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் போஸ்ட்மேன் (Postman) 59,099 பேரும், மெயில்கார்ட் (Mail Guard) பணிக்கு 1,445 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஆண், பெண்கள் என இருவரும் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்வோரின் குறைந்தபட்ச வயது என்பது 17ஆகவும், அதிகபட்சமாக விண்ணப்பத்தாரர்கள் 27 வயதுக்குள் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்:
India Post department
காலி பணியிடங்கள்:
59,099
பணியின் பெயர்:
Postman- 59,099
Mail Guard- 1,455
பணியின் விவரம்:
PostMan - 59,099
Male Guards - 1,445
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:
விண்ணப்ப பதிவு டிசம்பர் மாதம் 14ம் தேதி கடைசி நாளாகும்.
கல்வித் தகுதி:
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனத்தில் 10 அல்லது 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
indiapost.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தினை பெற்று, அதனை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 - 27 இருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் இருந்து சலுகை உண்டு.
சம்பள விவரம்:
குறைந்தபட்ச சம்பளமாக மாதம் ரூ.21,700 வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.69,100 வரை கிடைக்கும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
இந்தப் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இதையும் படிங்க;- 10, 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் அஞ்சல் துறையில் கை நிறைய சம்பளத்தில் வேலை.. விவரம் இதோ !!