SSC : 11 ஆயிரம் வேலைகள் காலி.. மத்திய அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ

By Raghupati R  |  First Published Mar 1, 2023, 9:38 PM IST

மத்திய அரசின் பணியாளர் தேர்வுக்கு 18 - 32 வயது வரை உள்ள 10ம் வகுப்பு, பிளஸ் 2 அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணியாளர் அரசு தேர்வு ஆணையம், 11 ஆயிரம் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் வாயிலாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு, திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.

Latest Videos

undefined

பணியாளர் அரசு தேர்வு ஆணையம், 11 ஆயிரம் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப உள்ளது. இத்தேர்வில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ, தனியார் நிறுவனம் வாயிலாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க..Bank Holiday : மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா.? முழு விபரம் உள்ளே !!

இதில், 18 - 32 வயது வரை உள்ள 10ம் வகுப்பு, பிளஸ் 2 அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்கேற்க, www. tahdco. com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதன் மூலம் மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..TN Rain Alert : மார்ச் 4ம் தேதி தமிழகத்தில் கனமழை ஊத்தப்போகுது..! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? முழு விபரம்

click me!