ஜெனரல் டியூட்டி கான்ஸ்டபிள்: விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்வது எப்படி?

By Rsiva kumar  |  First Published Dec 27, 2022, 11:50 AM IST

கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் தங்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதா? இல்லை நிராகரிக்கப்பட்டுவிட்டதா என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.


ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (Staff Selection Commission) எனப்படும் எஸ்.எஸ்.சி (SSC) மத்திய அரசின் பல்வேறு துறைகளில்  உள்ள காலி பணியிடங்களுக்கு பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஜெனரல் டியூட்டி கான்ஸ்டபிள் பணிக்கான ஆன்லைன் தேர்வு வரும் ஜனவரி மாதம் 10 ஆம் தேதி முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதுவரையில் அட்மிட் கார்டு வெளியாகாத நிலையில், வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரையில் காலக்கெடு கொடுக்கப்பட்டிருந்தது. கான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி) பணிகள் தேர்வில் கலந்துகொள்ள குறைந்தபட்ச வயது 18 வயது ஆகும். அதிகபட்சமாக 23 வயதுள்ளவர்கள்  இந்தத் தேர்வை எழுதலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச்  சேர்ந்தவர்களுக்கு (SC/ST) அதிகபட்ச வயதில் 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. பிற பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு  (OBC) அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.

Tap to resize

Latest Videos

BF7Variant வகை கொரோனா தொற்றை எதிர்கொள்ள அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? மாஸ் காட்டும் மா.சு..!

10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த கான்ஸ்டபிள் தேர்வை எழுத தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இந்த தேர்வுக்கு விண்ணப்பக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலமாக இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். முன்னாள் படை வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர் ஆகியோர் இந்தத் தேர்வுக் கட்டணம்  செலுத்த வேண்டியதில்லை. இந்தியா முழுவதும் நடத்தப்படும் இந்தத் தேர்வு தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில்  நடத்தப்படுகிறது. மேலும் குண்டூர், கர்னூல், ராஜமுந்திரி, திருப்பதி, புதுச்சேரி, ஐதராபாத், நிசாமாபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா, வாரங்கல் ஆகிய இடங்களிலும் நடத்தப்படுகிறது.

முதல்வர் மு.க. ஸ்டாலினின் முத்தான திட்டத்தால் மழை வெள்ளத்தில் இருந்து மீண்ட சென்னை... ஒரு பார்வை!!

கான்ஸ்டபிள் தேர்வுக்கு யாரெல்லாம் விண்ணப்பித்துள்ளீர்கள், விண்ணப்பம் சரியாக பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறதா? என்பது குறித்து எப்படி நாம் தெரிந்து கொள்ளலாம் என்று இந்தப் பதிவில் காண்போம்.

  1. முதலில் எஸ்.எஸ்.சியின் அதிகாரப்பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அதில் உங்களது பதிவு எண் மற்றும் பாஸ்வேர்டு கொடுக்க வேண்டும்.
  3. அதன் பிறகு மற்றொரு விண்டோ ஓபன் ஆகும். அதில், பதிவு எண் மற்றும் உங்களது பிறந்த தேதி கேட்கும்.
  4. அதன் பிறகு நீங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பார்க்கலாம்.
  5. மேலும், உங்களது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? நிராகரிக்கப்பட்டுவிட்டதா? என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

click me!