கேந்திர வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 414 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் இன்று இரவுக்குள் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
நாடு முழுவதும் ஆயிரத்து 245 கேந்திர வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 59 பள்ளிகள் இயங்கி வருகின்றன. நாடு முழுவதும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் 6 ஆயிரத்து 414 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் ரூ.1,12,000 சம்பளத்தில் வேலை
மத்திய கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள இப்பள்ளிகளில் பணிக்கு சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் பி.எட் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பங்கள் அனைத்தும் இணையதளம் வாயிலாக மட்டுமே பெறப்படுகின்றன. அதன்படி www.kvsangathan.nic.in என்ற லிங்க் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் 30 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் மட்டுமே பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
Holiday List 2023; 2023ம் ஆண்டுக்கான அரசு, வங்கி விடுமுறை லிஸ்ட்; ஜனவரியில் மட்டும் 6 நாள் லீவு
பணிக்கு தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இன்று இரவு 11.59 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.