தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள 87 பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காவலியாக உள்ள 87 பயிற்சியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வருகின்ற 30ம் தேதிக்குள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலி பணியிடங்கள் - 87
Archery - 1,
Cricket - 1,
Cycling - 1,
Squash - 1,
Wrestling - 1,
Wushu - 1,
Gymnastics - 2,
Judo - 2,
Kho - Kho - 2,
Swimming (Diving) - 2,
Taekwondo - 2,
Tennis - 2,
Para Athletics - 3,
Boxing - 3,
Fencing - 3,
Handball - 3,
Weightlifting - 3,
Swimming - 4,
Kabaddi - 4,
Athletics (Throws) - 5,
Football - 5,
Volleyball - 7,
Hockey - 7,
Basketball - 7,
Athletics (Jumps) - 7,
Athletics (Sprints) - 8
UPSC : குடிமைப்பணி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அரசு நடத்தும் மாதிரி ஆளுமைத் தேர்வு
மாதம் ரூ.35,600 முதல் 1,12,800 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 1ம் தேதிபடி 21 முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் 42 வயதிற்குள்ளும் மாற்றுத் திறனாளிகள் 47 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
சொன்ன நம்பமாட்டீங்க.. தமிழ்நாடு மகளிர் மேம்பாடு கழகத்தில் தெறிக்கவிடும் வேலைவாய்ப்புகள்..!
ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவில் ஏதாவதொன்றில் விளையாட்டு பயிற்சியாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இந்திய விளையாட்டு ஆணையம் அல்லது தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் பயிற்சியாளர் சான்றிதழ் படிப்பில் டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பதாரரின் விளையாட்டு தகுதி, பயிற்சியாளர் பணி அனுபவம், பத்தாம் வகுப்பு முதல் இளங்கலை பட்டம் வரையிலான தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் www.sdat.tn.gov.in என்ற இளையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வருகின்ற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.