அடகடவுளே.. ஆசிரியர் தகுதித் தேர்வில் எத்தனை சதவீதம் பேர் பாஸ் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!

By vinoth kumar  |  First Published Dec 23, 2022, 12:22 PM IST

அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அரசு கடந்த 2009ம்  ஆண்டும் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் தேர்வு பெறும் நபர்களே ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். 

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்ற விவரம் குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை முக்கிய தகவலை  வெளியிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அரசு கடந்த 2009ம்  ஆண்டும் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் தேர்வு பெறும் நபர்களே ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளா..? பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிக்கல்வித்துறை

இதேபோன்று, தமிழகத்தில் இந்த ஆண்டு அக்டோபர் 14ம் தேதி முதல் 19ம் தேதி ஆசிரியர் தகுதி நடத்தப்பட்டது. அந்த தேர்வில் முதல் தாள் ஒன்றில்  1 லட்சத்து 53 ஆயிரத்து  233 பேர் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் டிசம்பர் 7ம் தேதி தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியானது. இதில், வெறும்  21 ஆயிரத்து 543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இது சதவீதம் அடிப்படையில் 14 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழை, டி.ஆர்.பி.யின், http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் 3 மாதம் வரை பதிவிறக்கம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இவர்களுக்கான விவரங்களை சரிபார்த்து அளிக்க அவகாசம் வழங்கப்பட்டது. எனவே, தற்போது திருத்தம் செய்வதற்கான கோரிக்கையின் மீது, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;-  கால் இருக்காதுன்னு அமைச்சரை மிரட்டிய சசிகலா புஷ்பா! வீட்டை அடித்து நொறுக்கிய 3 திமுக கவுன்சிலர்கள் மீது வழக்கு

click me!