RRB Group D Result 2022: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரிய கணினி தேர்வு முடிவுகள் எப்போது?

By Dhanalakshmi G  |  First Published Dec 22, 2022, 3:40 PM IST

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் (RRB) குரூப் D 2022-க்கான தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, டிசம்பர் 24, 2022 அன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இருப்பினும், வாரியம் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வரும் டிசம்பர் 24, 2022 அல்லது அதற்கு முன்பே முடிவுகளை அறிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பாணையை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் இதுவரை அறிவிக்காமல் உள்ளது. இதனால்,  தேர்வு எழுதியவர்கள் எந்த தேதியில் முடிவுகள் வெளியாகும் என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். 

RRB குரூப் D தேர்வுகள் கணினி மூலம் நடத்தப்பட்டது. இந்த தேர்வு ஆகஸ்ட் 17, 2022 முதல் அக்டோபர் 11, 2022 வரை பல கட்டங்களாக நடத்தப்பட்டது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 'உடல் திறன் தேர்வுக்கான விண்ணப்பதாரர்களின் தேர்வுப் பட்டியல், கணினி தேர்வு முடிவுகள் அடிப்படையில் தயாராகி வருகிறது. முடிவுகள் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் 24.12.2022 அல்லது அதற்கு முன் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

undefined

சொன்ன நம்பமாட்டீங்க.. தமிழ்நாடு மகளிர் மேம்பாடு கழகத்தில் தெறிக்கவிடும் வேலைவாய்ப்புகள்..!

இணையதள முகவரிகள்:
RRB Ahmedabad: rrbahmedabad.gov.in

RRB Ajmer: rrbajmer.gov.in

RRB Allahabad: rrbald.gov.in

RRB Bangalore: rrbbnc.gov.in

RRB Bhopal: rrbbhopal.gov.in

RRB Bhubaneshwar: rrbbbs.gov.in

RRB Bilaspur: rrbbilaspur.gov.in

RRB Chandigarh: rrbcdg.gov.in

RRB Chennai: rrbchennai.gov.in
RRB Gorakhpur: www.rrbgkp.gov.in

RRB Guwahati: rrbguwahati.gov.in

தொழில் தொடங்க ஏதாவது பிளான் இருக்கா? ரூ.10 லட்சம் வரை அரசின் மானியம் பெறலாம்.. எப்படி தெரியுமா?

RRB Jammu: rrbjammu.nic.in

RRB Kolkata: rrbkolkata.gov.in

RRB Malda: rrbmalda.gov.in

RRB Mumbai: rrbmumbai.gov.in

RRB Muzaffarpur: rrbmuzaffarpur.gov.in

RRB Patna: rrbpatna.gov.in

RRB Ranchi: rrbranchi.gov.in

RRB Secunderabad: rrbsecunderabad.gov.in

RRB Siliguri: rrbsiliguri.gov.in

RRB Trivandrum/Thiruvananthapuram: rrbthiruvananthapuram.gov.in

மேலும், அந்த அறிவிப்பில், 'கணினி தேர்வில் தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள், மண்டல ரயில்வேயின் அந்தந்த ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவுகளால் (ஆர்ஆர்சி) பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் உடல் திறன் தேர்வுக்கு (பிஇடி) தயாராக இருக்க வேண்டும். உடல் திறன் தேர்வு ஜனவரி 2023 முதல் நடத்த தற்காலிகமாக திட்டமிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக, அந்தந்த ரயில்வே ஆட்சேர்ப்பு மையங்கள் தனியாக அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் அறிவிப்புகளை வெளியிடும் என்று தெரிய வந்துள்ளது.

SCI Recruitment 2022: இளைஞர்களுக்கு உச்சநீதிமன்றத்தில் ரூ.80,000 சம்பளத்தில் வேலை

click me!