தொழில் தொடங்க ஏதாவது பிளான் இருக்கா? ரூ.10 லட்சம் வரை அரசின் மானியம் பெறலாம்.. எப்படி தெரியுமா?

By vinoth kumar  |  First Published Dec 22, 2022, 12:00 PM IST

உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன என்று சென்ன மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன என்று சென்ன மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மத்திய அரசின் 60 சதவீத நிதிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்தல் வகைப்பாட்டின் கீழ் அடங்கும் பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், காய்கறிகள், பழங்கள், மீன் மற்றும் இறால் கொண்டு செய்யப்படும் ஊறுகாய், வற்றல் தயாரித்தல், அரிசி ஆலை, உலா் மாவு மற்றும் இட்லி, தோசைக்கான ஈர மாவு தயாரித்தல், அப்பளம் தயாரித்தல், உணவு எண்ணெய் பிழிதல், மரச் செக்கு எண்ணெய், கடலை மிட்டாய், முறுக்கு, பேக்கரி பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகைத் தின்பண்டங்கள் தயாரித்தல், சாம்பாா் பொடி, இட்லி பொடி, மசாலா பொருட்கள் தயாரித்தல், பால் பதப்படுத்துதல், தயிா், நெய், பனீா் உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரித்தல், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை செய்யும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் மற்றும் தொழில் நுட்ப மேம்படுத்தல் செய்யவும் பயன்பெறலாம்.

Latest Videos

undefined

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இத்திட்டத்தின் கீழ் புதிதாகத் தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர்,  ஏற்கனவே உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோா் மற்றும் குறு நிறுவனங்கள், சுய உதவிக் குழுவினர், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் பயன் பெறலாம்.

திட்ட விவரம்:

ரூ.1 கோடி வரையிலான திட்டத் தொகை கொண்ட உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி பெறத் தகுதி பெற்றவை. திட்டத் தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளர் தம் பங்காகச் செலுத்த வேண்டும். 90 சதவீதம் வங்கிகளால் பிணையமில்லா கடனாக வழங்கப்படும். அரசு 35 சதவீத மானியம், அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கும்.

சுய உதவிக் குழு:

சுய உதவிக் குழுவினர் உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.40,000 வீதம் தொடக்க நிலை மூலதனமாக வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற https://pmfme.mofpi.gov.in/ - என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 

தொடர்ப்புக்கு:

இணை இயக்குநர்,
தொழில் மற்றும் வணிக மண்டல அலுவலகம்,
A-30, சிட்கோ தொழிற்பேட்டை,
கிண்டி,
சென்னை-32 

click me!