8வது படித்தவர்களுக்கு 63,000 சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை

By Velmurugan s  |  First Published Dec 20, 2022, 3:42 PM IST

இந்திய அஞ்சல் துறையின் கீழ் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தமிழக அஞ்சல் ஊர்தி சேவை திறன்வாய்ந்த கைவினை கலைஞர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை வருகின்ற ஜனவரி 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 


காலிப் பணியிடங்கள்
MV Mechanic - 4
MV Electrician - 1
Copper and Tinsmith - 1
Upholster - 1

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயது வரம்பு - கடந்த ஜூலை 1ம் தேதியின் படி 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் சலுகை கோருவாருக்கு அரசு அறிவிப்பு படி சலுகைகள் வழங்கப்படும்.

Tap to resize

Latest Videos

தகுதி - துறை சார்ந்த பிரிவில் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். அல்லது 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய துறையில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். MV மெக்கானிக் பணிக்கு விண்ணப்பிப்போர் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

பெட்ரோல் திருட்டு? வலிப்பு வந்தபோதும் வடமாநில இளைஞரை தாக்கிய பொதுமக்கள்

தொழில்முறைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் www.indiapost.gov.in என்ற பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை, எண்.37, கிரீம்ஸ் சாலை, சென்னை 600 006 என்ற முகவரிக்கு ஜனவரி 9ம் தேதிக்குள் பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

 

click me!