டெல்லி உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள அசிஸ்டெண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பணிக்கு தகுதியான நபர்கள் தங்கள் விண்ணப்பங்களை இம்மாத இறுதிக்குள் அணுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள 11 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 18 வயது முதல் 30 வயதுக்குள் உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
பொறியியல் பிரிவில் கணினி அறிவியல், ஐடி பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்சிஏ, எம்.எஸ்சி கணினி அறிவியல், பி.எஸ்சி கணினி அறிவியல், பிசிஏ போன்ற பிரிவுகளில் ஏதேனும் ஒரு கல்வி தகுதியுடன் ஓராண்டு கணினித் துறை சார்ந்த பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
undefined
கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வுக்கு அழைப்புகள் விடுக்கப்படும். தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். பின்னர் விண்ணப்பதாரரின் தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ.44 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
8வது படித்தவர்களுக்கு 63,000 சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை
விருப்பமுள்ளவர்கள் www.main.sci.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யவும். பின்னர் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ் நகல்களை இணைத்து The Registrar (Recruitment), Supreme Court of India, Tilak Marg, New Delhi, Pin - 110 001 என்ற முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். விண்ணப்பங்கள் இந்த மாதம் 31ம் தேதிக்குள் சென்றடைய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.