Job Tips : கூகுள் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, இந்த 5 விஷயங்களை செய்துவிடாதீர்!

By Dinesh TGFirst Published Sep 12, 2022, 4:11 PM IST
Highlights

கூகுளில் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது 5 முக்கிய விஷயங்களை விண்ணப்பதாரர்கள் மனதில் கொள்ள வேண்டும் என்று கூகுளின் மூத்த பணியாளர் எரிகா ரிவேரா அறிவுறுத்தியுள்ளார். 

கூகுள் போன்ற நிறுவனங்களில் பணி பெறுவது என்பது பலரின் குறிக்கோளாக உள்ளது. இதற்காக பலரும் பலவிதமான பயிற்சிகளையும், ஆன்லைன் படிப்புகளையும் கூடுதலாக படித்து வருகின்றனர். ஒரு காலியிடத்திற்கு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். இவ்வாறு விண்ணப்பிக்கும் போது, ஒரு விண்ணப்பதாரரின் தகுதியையும், திறமையும் Resume எனப்படும் அவரது சுயவிவரமே முன்னோட்டம் செய்கிறது.  ஒருவரது ரெஸ்யூம் மற்றும் அதில் உள்ள விவரங்கள் தான் முதல் பார்வைக்கு வழிவகுக்கிறது.

அந்த வகையில், கூகுளில் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது 5 முக்கிய விஷயங்களை விண்ணப்பதாரர்கள் மனதில் கொள்ள வேண்டும் என்று கூகுளின் மூத்த பணியாளர் எரிகா ரிவேரா அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி, 

முழு முகவரி தேவையில்லை:

உங்கள் ரெஸ்யூமில் உங்கள் இருப்பிடத்தின் முழு முகவரியையும் குறிப்பிடத் தேவையில்லை. நீங்கள் இருக்கும் நகரம், உங்கள் மாநிலம் மட்டும் குறிப்பிட்டாலே போதுமானது. தேவையில்லாமல் முழு முகவரி, கதவு எண் உள்ளிட்ட விவரங்களை கொடுப்பதால் எந்தப் பலனும் இல்லை. நீங்கள் பணிக்கு முதல் நிலை தேர்வாகும் போது, உங்கள் முகவரி விவரங்களை கொடுத்தால் போதுமானது.

இதற்கு முந்தைய பணி விவரங்கள்:

நீங்கள் ஒருவேளை இதற்கு முன்பு பல நிறுவனங்களில் பணியாற்றியவராக இருந்தால், அந்த நிறுவனங்களின் விவரங்களை குறிப்பிடத் தேவையில்லை. ஒருவேளை நீங்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ற நிறுவனமாக அது இருந்தால், அப்போது கொடுக்கலாம். அதையும் தாண்டி, நீங்கள் ஆர்வமாக இருக்கும் பணி, அல்லது பணிக்கு தேவையானவை மட்டும் கொடுத்தால் போதும்.

நான் பலருக்கு உதவியாக இருந்தேன், எனக்கு இவ்வளவு பொறுப்புகள் உள்ளன போன்றவற்றை குறிப்பிட வேண்டாம். இவையணைத்தும் உங்களை பலவீனமாக்கக் கூடிய வார்த்தைகள். அதற்குப் பதிலாக im increased, im produced  போன்ற தொழில்நிபுணத்துவம் வாய்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்

Airtel 5G வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி! புதிதாக 5ஜி சிம் வாங்கத் தேவையில்லை!!
 

Reference available upon request என்று உங்கள் ரெஸ்யூமிலேயே நீங்கள் குறிப்பிடலாம்

இப்போதும் பலர் தங்கள் ரெஸ்யூமில் ‘Objective’ என்று தலைப்பிட்டு எழுதி வருகிறார்கள். உண்மையில் சொல்லப்போனால் இது பழைய நடைமுறை. இப்போதைய சூழலுக்கு இது தேவையே இல்லை. எனவே, இவையெல்லாம் தவிர்த்து முறையானதை சரியாக செய்தாலே போதுமானது. 

கூகுளில் வேலைக்கு எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பது குறித்து முழு விவரங்களுக்கு அந்நிறுவனம் பிரத்யேகமாக ஒரு கட்டுரையே வழங்கியுள்ளது. அதை பின்வரும் இணையதளத்திற்குச் சென்று பார்க்கலாம்: https://careers.google.com/how-we-hire/

click me!