இனி சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும்.. வெளியான புதிய அறிவிப்பு..

Published : Jun 24, 2023, 08:14 PM IST
இனி சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும்.. வெளியான புதிய அறிவிப்பு..

சுருக்கம்

சிங்கப்பூரில் சர்வீஸ் செக்டாரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு எளிதாக வேலை கிடைக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

சிங்கப்பூரில் NTS ஆக்கிரமிப்பு பட்டியலின் கீழ், நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட தொழில்களுக்கு NTS நாடுகளில் இருந்து பணி அனுமதி பெற்றவர்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கப்படும் என்று சிங்கப்பூர் தொழிலாளர் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக சிங்கப்பூரில் சேவைகள் மற்றும் உற்பத்தி துறைகளில் உள்ள நிறுவனங்களில் NTS பட்டியலில் உள்ளவர்கள் ஒரு சில வேலைகளுக்கு பணி அமர்த்த அனுமதி இல்லாமல் இருந்தது. ஒரு சில வேலைகளை அவர்கள் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 2023-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் NTS பட்டியலில் உள்ள நாடுகளை சேர்ந்தவர்களை தடை செய்யப்பட்ட வேலைகளுக்கு (Restricted Occupation) பணியமர்த்த சிங்கப்பூர் தொழிலாளர் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

முதல் அரசு முறை பயணமாக எகிப்து சென்றார் பிரதமர் மோடி.. அதிபருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை..

அதன்படி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சில நிபந்தனைகளும் உள்ளது. விண்ணப்பிக்கும் வயது மற்றும் அதிகபட்ச வேலை காலம் ஆகியவற்றின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மட்டுமே பணியமர்த்த முடியும்.

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்க் எடுக்க அனுமதிக்கப்பட்ட நாடுகள்

  • மலேசியா
  • சீனா

பாரம்பரியமற்ற ஆதாரங்கள் (Non Traditional sources)

  • இந்தியா
  • இலங்கை
  • தாய்லாந்து
  • பங்களாதேஷ்
  • மியான்மர்
  • பிலிப்பைன்ஸ்

வட ஆசிய ஆதாரங்கள்

  • ஹாங்காங்
  • மக்காவ்
  • தென் கொரியா
  • தைவான்

“ தப்பான முடிவு எடுத்துட்டீங்க புடின்.. ரஷ்யாவுக்கு விரைவில் புதிய அதிபர்..” வாக்னர் குழு எச்சரிக்கை..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Job: ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
Job Vacancy: டிகிரி வேண்டாம், 10 ஆம் வகுப்பே போதும்! ரூ.57,000 சம்பளத்துடன் மத்திய அரசு பணி காத்திருக்கு.! Apply Now