தெற்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தெற்கு மத்திய ரயில்வே scr.indianrailways.gov.in என்ற தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 35 காலியிடங்களுக்கான ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட்ஸ் (கட்டுமானம்/ஓபன் லைன்) ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது. ஆர்வமும் தகுதியும் உள்ள ஜூன் 30, 2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தென் மத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு 2023
undefined
தென் மத்திய ரயில்வே 35 காலியிடங்களை நிரப்ப ஒப்பந்த அடிப்படையில் ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் பணியிடங்களை (JTA) பணியமர்த்த உள்ளது. பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்துகொள்ள அழைக்கப்படுவார்கள்.
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணி காலியிடங்கள்.. என்ன தகுதி? சம்பளம் எவ்வளவு? விவரம் இதோ
முக்கிய தேதிகள்
தென் மத்திய ரயில்வே அறிவிப்பு வெளியீடு - 05 ஜூன் 2023
விண்ணப்பத்தின் தொடக்க தேதி - 05 ஜூன் 2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி - 30 ஜூன் 2023
விண்ணப்பதாரர்கள் Secretary to Principal Chief Personal Officer & Senior Personal Officer (Engineering), Office Personal Chief Personnel Officer, 4th Floor, Personnel Department, Rail Nilayam, South Central Railway, Secunderabad, Pin – 500025 என்ற முகவரியில் தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
SC/ST/OBC/பெண்கள்/சிறுபான்மையினர்/EWS பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ. 250 கட்டணம் செலுத்த வேண்டும், மற்ற பிரிவினருக்கு ரூ. 500 கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் பணிக்கான (Works) (Const/OL) கல்வித் தகுதி - சிவில் இன்ஜினியரிங்க் துறையில் இளங்கலை பட்டம் அல்லது சிவில் இன்ஜினியரில் டிப்ளமோ. அல்லது B. Sc. சிவில் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் (Electrical) (Drawing) (Const/OL) ) - இளங்கலைப் பட்டம் க்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். அல்லது மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் டிப்ளமோ அல்லது மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஏதேனும் ஒரு துணைப் பிரிவின் சேர்க்கையில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் (S&T (Drawing) (Const/OL)க்கான கல்வித் தகுதி - (அ) எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ இன்பர்மேஷன் டெக்னாலஜி/ கம்யூனிகேஷன் இன்ஜி/ கம்ப்யூட்டர் சயின்ஸ் & இன்ஜி/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ கம்ப்யூட்டர் இன்ஜினிங் அல்லது (பி) ஏதாவதொரு துணையின் கலவையில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி/ கம்யூனிகேஷன் இன்ஜி./ கணினி அறிவியல் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1-7-2023 தேதியின்படி பொது பிரிவினருக்கு 18-33, OBC க்கு 18-36 வயது, SC/ST பிரிவினருக்கு 18-38 வயது
தேர்வு செய்யப்படும் முறை:
55 மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
அனுபவம் - 30 மதிப்பெண்கள்
ஆளுமை/புத்திசாலித்தனம்- 15 மதிப்பெண்கள்
மத்திய ரயில்வேயின் கீழ் ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட்டாக நியமிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ.25,000-30,000/ சம்பளம் பெறலாம். எனினும் பணியிடங்களுக்கு ஏற்ப சம்பளம் மாறுபடலாம்.
தெற்கு மத்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ
ரூ.60,000 சம்பளம்.. எஸ்பிஐ வங்கியில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பணியிடங்கள்.. முழு விவரம் இதோ..