UPSC : 113 உதவி பேராசிரியர் காலி பணியிடங்கள்.. யுபிஎஸ்சி வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு.! முழு விபரம்

Published : Jun 24, 2023, 10:29 AM IST
UPSC : 113 உதவி பேராசிரியர் காலி பணியிடங்கள்.. யுபிஎஸ்சி வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு.! முழு விபரம்

சுருக்கம்

யுபிஎஸ்சி (UPSC) 113 உதவி பேராசிரியர் மற்றும் பிற பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) உதவி பேராசிரியர், உதவி அறுவை சிகிச்சை நிபுணர்/மருத்துவ அதிகாரி, ஸ்பெஷலிஸ்ட் கிரேடு III மற்றும் பிற பதவிகளுக்கான காலி இடங்களை அறிவித்துள்ளது. தகுதியானவர்கள் upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 29 ஆகும்.

விண்ணப்பக் கட்டணம்: 

விண்ணப்பதாரர்கள் (பெண்கள்/எஸ்சி/எஸ்டி/பெஞ்ச்மார்க் மாற்றுத்திறனாளிகள் தவிர, கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்றவர்கள்) ரூ.25 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்பிஐயின் ஏதேனும் ஒரு கிளையில் ரொக்கமாகவோ அல்லது ஏதேனும் வங்கியின் நெட் பேங்கிங் வசதியைப் பயன்படுத்துவதன் மூலமாகவோ அல்லது விசா/மாஸ்டர்/ரூபே/கிரெடிட்/டெபிட் கார்டு/யுபிஐ பேமெண்ட் மூலமாகவோ மட்டுமே கட்டணம் செலுத்த முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி:

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) அதிகாரப்பூர்வ இணைய தளமான  upsconline.nic.in மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒரு முறை பதிவு (OTR) இணைப்பைக் கிளிக் செய்து பதிவு சுயவிவரத்தை உருவாக்க வேண்டும். ஏற்கனவே பதிவு செய்திருந்தால், மீண்டும் பதிவு செய்ய தேவையில்லை. விவரங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றவும். கட்டணம் செலுத்தி படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். எதிர்கால தேவைக்காக விண்ணப்பதாரர்கள் பிரிண்ட்அவுட் எடுத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

TNPSC : போட்டித்தேர்வர்களுக்கு குட் நியூஸ்.. குரூப் 4 தேர்வு காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Job: ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
Job Vacancy: டிகிரி வேண்டாம், 10 ஆம் வகுப்பே போதும்! ரூ.57,000 சம்பளத்துடன் மத்திய அரசு பணி காத்திருக்கு.! Apply Now