தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கு நாளை மறுநாள் வரை விண்ணப்பிக்கலாம்.
குரூப் 1 தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் அதிகாரபூர்வ இணையதளமான www.tnpsc.gov.in / www.tnpscexams.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், விண்ணப்பத்தாரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தங்களது பதிவு எண்/கடவுச் சொல்லை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தேர்வர்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள கல்வி விவரங்கள் குறித்த தகவல்களை குறிப்பிட வேண்டும்.
மேலும் படிக்க:இதையே ஒரு இந்து சேர்ந்திருந்தா சும்மா விட்டுருப்பீங்களா.. திமுக அரசை சீண்டும் கிருஷ்ணசாமி..!
மேலும் மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், அரசுப் பணியாளர் போன்ற சிறப்புப் பிரிவை சேர்ந்தவர், அதற்கான சான்றிதழ் விவரங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் தமிழ் வழி கல்வியில் படித்திருந்தால், அதற்கான இட ஒதுக்கீட்டை கோரலாம். மேலும் உடற்தகுதி (உயரம், மார்பின் அளவு) உள்ளிட்ட விவரங்கள் சமர்பிக்க வேண்டும்.
குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இதில் முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது, ஏதேனும் இரண்டு விருப்பமுள்ள மாவட்டங்களில் இருந்து தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் முதன்மைத் தேர்வுக்கு ஏதேனும் ஒரு மாவட்டத்தில் இருந்து தான் தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:புதிய விமான நிலையத்தால் மக்கள் அச்சம்.. அழியும் நீர் நிலைகள்..? பரபரப்பு விளக்களித்த அமைச்சர்..
விண்ணப்பத்தில் ஏதேனும் விவரங்கள் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால், அவை நிராகரிக்கப்படும் என்றும் விண்ணப்பத்தாரர் மீது எந்தவித குற்றவியல் வழக்குகளும் பதிவு செய்திருத்தல் கூடாது என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில் குரூப் 1 தேர்வுக்கு நாளை மறுநாள் வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பின்னர் அச்சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.