இந்திய ராணுவத்தில் வேலை.. பிளஸ் 2 படித்திருந்தால் போதும்.. ரூ.92,000 வரை சம்பளம்..

By Thanalakshmi V  |  First Published Aug 19, 2022, 3:58 PM IST

இந்திய இராணுவத்தில் எல்லை பாதுகாப்பு படையில் உள்ள காலி பணியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, சுருக்கெழுத்து, தட்டச்சு தேர்வு ஆகிய முறையில் பதவிகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
 


காலி பணியிடங்கள்: 

Stenographer - Assistant sub Inspector பதவியிடங்கள் - 11 

Tap to resize

Latest Videos

Head Constable பதவியிடங்கள் - 312 என மொத்தம் 323 இடங்கள் காலியாக உள்ளன. 

கல்வித்தகுதி : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் 12 ஆம் வகுப்பு வரை முடித்திருக்க வேண்டும். மேலும் ஒரு நிமிடத்துக்கு 80 ஆங்கில வார்த்தைகளை சுருக்கெழுத்து, மினிஸ்டெரியல் பணிக்கு நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், 18 யிலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை வழங்கப்பட்டுள்ளது. 

சம்பளம்:

Head constable பதவிக்கு மாதந்தோறும் ரூ 25,500 – 81,100/  வரை ( Level-4) வழங்கப்படும்.

Assistant Inspector பதவிக்கு ரூ. 29,200 யிலிருந்து 92,300 வரை (Level-5) சம்பளமாக வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் தேதி:

காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.  

விண்ணப்பிக்கும் முறை: 

https://rectt.bsf.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: 

காலி பணியிடங்களுக்கு விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவை சேர்ந்தவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: 

எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, சுருக்கெழுத்து, தட்டச்சு தேர்வு ஆகிய முறையில் பதவிகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
 

மேலும்  படிக்க:அரசு வங்கியில் எழுத்தர் பணி.. முதல்நிலை தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியீடு.. பதவிறக்கம் செய்வது எப்படி..?

click me!