தேர்வர்களே அலர்ட் !! குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி.. நாளை முதல் தொடக்கம்.. எப்படி விண்ணப்பிக்கலாம்..?

By Thanalakshmi V  |  First Published Aug 18, 2022, 5:56 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான கட்டணமில்லாக இலவச பயிற்சி சென்னை தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதில் ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் கலந்துக்கொள்ளலாம்.
 


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான கட்டணமில்லாக இலவச பயிற்சி சென்னை தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதில் ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் கலந்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க:வருகிறது புதிய சட்டம்.. பேருந்துகளில் இப்படியெல்லாம் நடந்துக்கொள்ளும் ஆண்களை இறக்கிவிடுங்கள்.. அரசு உத்தரவு

Tap to resize

Latest Videos

தமிழக அரசில் காலியாக உள்ள துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட 6 வகையான பதவிகளுக்கு குரூப் 1 தேர்வு நடைபெறுகிறது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. வரும் 22ம் தேதி வரை விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பிக்கலாம்.

மேலும் படிக்க:ரூ.43,000 சம்பளத்தில் ஆவினில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? நேர்காணல் எப்போது..? முழு விவரம்

இந்நிலையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 1 தேர்வர்களுக்கு இலவச பயிற்சி நடைபெறவுள்ளது.  நாளை முதல் தொடங்கும் இந்த பயிற்சியில், குரூப் I போட்டித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள்கலந்து கொண்டு பயன்பெறலாம்.

click me!